Nov 11, 2011

பெண்ணும் புத்தகமும்



பேருந்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்குண்டு 
தமிழ் பிடித்ததால் படிக்கிறேனா படித்ததால் தமிழ் பிடித்ததா தெரியவில்லை
பெண்களைப் பிடிக்கும் வயதில் புத்தகம் பிடித்ததும் படித்ததும் 
முரணான பழக்கங்கள் இல்லையென்பது படித்தவர்கள் வாக்கு.
(புத்தகத்தையும் பெண்ணையும் ஒருசேர )

பெண் பிடித்த பருவங்களில் நான் சந்தோசமாக சஞ்சரித்தாலும் 
பெண்களால் படிக்க முடியவனாகவே இருப்பது ஒரு சங்கடம் தான்
புத்தகம் படிப்பது பெண் பற்றிய நிறைய புரிதல் ஏற்படுத்தினாலும் 
அது என் பெண்ணின் ரசனையையும் அதிகப்படுத்திருக்கிறது 
கதைளில் காதல்களை தேடி வாசித்ததுண்டு இது வரை கிடைக்காதது 
யோசிக்கும் பொழுது மூடி யாசித்ததுமுண்டு 

இன்றும் புத்தகம் திறந்தேன் பேருந்தில் 
எதிரில் படிக்கக் காத்திருந்த பெண் ஒருத்தி 
எதை தொடங்க வண்ணதாசனின் கவிதைகளையா,
கருப்பு வெள்ளையில்  தெரியும் வனவில்லையா
இரண்டுமே என்னுள் எழும் உணர்சிகள் தான் எனினும் 
புத்தகத்தை எழிதாக முடிவிட முடிகிறது.
என் அகத்தினுள் பெண் இல்லாததுதான் போலும்.

தீட்டப்பட்ட புருவங்கள் வானமாய் இமைகள் சிறகடிக்க 
பறக்கும் விழிகளின் ஈரத்தின் சாரலில் நனையத்தொடங்கிய
சில நிமிடங்களில் அவளின் இறக்கம் வந்தது அனால் 
சற்றும் இரக்கம் வரவில்லை என் மிது
உறக்கம் பெரிதென்று மற்றவர்கள் கிடக்க
கிறக்கம் கொண்ட என்னைக் கண்டு கொள்ளத் தெரியவில்லை 

அந்த இறக்கத்தில் இறங்கியது அவள் ஒருத்தி இல்லை
என் இதயமும் இறங்கியதை எனக்கே இப்பொழுதுதான் தெரியவந்தது 
என்னை விட்டு பராரியை பாவைபின் சுற்றும் எனக்கவலை எனக்கில்லை 
பராரியின் சந்தோசம் கூட இல்லாமல் எனக்கு வாய்க்கவில்லை
இடப்பக்கம் இதயம் இல்லாத போதும் அதற்கு மேல் பயச்சீட்டும் சில்லறையுடன் நான்.......

2 comments:

  1. சில எழுத்துப்பிழைகள். சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இது கவிதையா? கதையா? பிடித்த அம்சங்கள் இருக்கின்றன. அனால் இது என்ன எழுத்து வடிவம் எனத்தெரியவில்லை. உங்கள் கற்பனையை ஒரு வடிவத்தினுள் புகுத்தி சிறந்த படைப்பாக்க ஆசைப்படுகிறேன். விரைவில் நடவும் என நினைக்கிறேன். ஒரு கதை எழுதுவதற்கு முன் கதையின் வடிவத்தை அறிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். நீங்களும் அவ்வாறே நினைக்க நினைக்கிறேன். :)

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி. இது கதையும் இல்லை கவிதையும் இல்லை என்று நழுவவிரும்பவில்லை.
    அந்த இடத்தில் உணர்ந்த சில மயக்கங்களின் பதிவு மட்டுமே.. ஆனால் இதை ஒரு வடிவத்துள் கொண்டு வந்த முயற்சியின் தோல்விதான் இது..

    ReplyDelete