Dec 25, 2010

கண்ணாடிப் பருவம் - ஒன்று

மிசை முளைத்ததும் கண்களின் வேலை இரண்டு
ஒன்று - கண்ணாடியில் தன்னை அழகாக்கிப் பார்க்க
இரண்டு - பார்த்த முகத்தை பெண் முன்னின்று காட்ட

முடாத வாய்மூடி பேசாத விழிகள் பேசத் தொடங்கும்
கண்போன பாதையில் சென்ற கால்கள் இப்போது
பெண்போன பாதையில் செல்ல ஆரம்பிகிறது

கதாநாயகனின் சண்டை காட்சிகளை மட்டும் பார்த்து ரசித்தவர்கள்
அவன் காதல் செய்வதையும் கவனித்து ரசிக்க ஆரம்பிக்கிறார்கள்
அவனின் காதலியை இவர்களும் காதலிக்கிறார்கள்

கனவிலும் செரி நினைவிலும் செரி பெண்களே நிறைகிறார்கள்
கண்ணெதிரே பார்த்த பெண்ணிடமோ கனவில் பேசுகிறார்கள்
கனவில் கண்ட பெண்ணையோ கடைத்தெருவில் தேடுகிறார்கள்

நிலவைப் பார்த்து சோறுண்டவர்கள் பின் நிலாவை
தேடித்தேடி பிடித்து ஒட்டுத்தால்வாரத்தில் அடைத்தவர்கள்
நிலாவுடனும் படுகிறார்கள் நிலவையும் பற்றியும் படுகிறார்கள்

காமத்தீயால் இளமை இதயத்தை எரிக்க எழுந்த வெப்பத்தை
காதலில் இளைப்பாற்ற காதலியைத் தேடியலைகிறார்கள்
சிலருக்குத்தான் தேடிய காதலி கிடைக்கிறார்கள்
தேடிக்கிடைக்காதவர்கள் கிடைத்தை காதலிக்கிறார்கள்

தேடல் என்றும் தொடரும்!!!

காதல் பருவம் - ஒன்று


உண்மை எது?
ஈர்க்கும் உன் புன்னகை போதும் கண்ணே!!, பொன்நகை விலையதிகமானத்தால் சொல்லவில்லை..
புன்னகைக்கும் ஓவியம் கண்டதுண்டு!! ஒரு ஓவியம் புன்னகைப்பதைப் பார்க்கத்தான் அன்பே..

மல்லிகைச்சரம் வேண்டாம் உன் குந்தலுக்கு!! காசு கையில் இல்லாமல் சொல்லவில்லை..
மல்லிகையினால் உன் குந்தல் மணக்கவில்லை கானகாம்பரத்தில் கூட மல்லிகை வாசம் உன் குந்தலால்..

ஊனம்

என் எண்ணங்களை உன்னிடம் கூறமுடியாத பொழுது உமையானேன்.. என் காதுகளில் உன்னுடைய வார்த்தைகள் விழாதபொழுது செவிடானேன்.. உன் பாதையில் நான் நடக்க முடியாத நாட்களெல்லாம் நான் முடவன்..
உன் வசமில்லாத காற்றை நுகர்க்கும் தருணங்களில் பிணமானேன்..

மேற்ச்சொன்ன எந்த ஊனத்தையும் நான் பொறுத்துக்கொள்கிறேன்..
உன்னை நான் என் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தால்..
ஆகையால் குருடனாக மட்டும் இருக்க முடியாது கண்ணே..
இந்தப்பேரழகியை எனக்குக்காட்டிய என் கண்களுக்கு தண்டனை தர முடியாது.

சமாதிகள்

ஒரு பொய்யிலாவது நான் உன் காதலனாக வேண்டுமென்று ஆசைப்படவில்லை
மெய்யை உரைத்து விடு என்னை உன் காதலனாக ஏற்கமுடியாதேன்று உண்டே சொல்லிவிடு
இந்த வேகம் உன்னுடனான காதலை சமாதிகட்டுவதற்காக இல்லை
எனக்கே சமாதிகட்டுவதற்காக, என் பிணம் மேலும் நாறுவதற்குள்..

Apr 4, 2010

குத்து - ஓன்று

கடவுள்

கோவிலிலிருந்து வெளியே வந்தேன் பிச்சைக்காரன் "தர்மம் பண்ணுங்க சாமி" என்றான்,இறைவனிடம் உள்ளே பிச்சை கேட்ட என்னிடம்.
தர்மம் செய்தேன் பிச்சைக்காரன் " நல்லாருக்கணும் தம்பி" என்று இருக்கையை உயர்த்தினான், இப்பொழுது அவன் இறைவனானான்.

கைக்கெடிகாரம் - ஓன்று

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் கைக்கெடிகாரம் பரிசு கொடுத்தார் அப்பா, படித்த நேரத்திற்கான பரிசில்லை அது வீணடித்த நேரத்தை உணர்த்தும் தண்டனை. பயனற்றுப்போன நேரத்திற்க்கெல்லாம் உழைத்திருக்கலாமென்று உறுத்திக்கொண்டேயிருந்தது. வீண்போன நேரத்தை தேடினேன், தேடிய நேரமும் வீணாகுமெனத் தெரியாமல். நேரத்தை துரத்த அசை ஆனால் தோற்க்கப் பிடிக்காததால் துறந்தேன். துரத்தாதே நேரமே கழற்றுகிறேன் கைக்கேடிகரத்தை உடனே பாரில் நிறையவுண்டு பார்க்க உன்னைப் பார்த்துப்பார்த்து பார்க்க முடியாமல்.

கைக்கெடிகாரம் - இரண்டு


பூட்டிய செக்கு மாடுகள் வட்டமாக மட்டும் சுற்றுவதைப் போல வட்டமான கண்ணாடிப்பெட்டிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த முட்கள். தொடங்கிய இடம் தெரியாமல் சேரவேண்டிய இடம் புரியாமலும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த முட்கள் சேர்வதர்க்காகத்தான் சுற்றியது போலிருக்கும் சேர்ந்த சில நொடியில் பிரிவதற்க்கான பாதையில் படுவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கும். சேர்வதற்கும் பிரிவதற்கும் ஒரே வேகம் தான். ஒருநாள் நிற்கத்தான் போகிறதென்று தெரியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது நின்ற பின்பும் துடிப்படங்காமல் தவித்துக் கொண்டேயிருக்கிறது.