Apr 4, 2010

குத்து - ஓன்று

கடவுள்

கோவிலிலிருந்து வெளியே வந்தேன் பிச்சைக்காரன் "தர்மம் பண்ணுங்க சாமி" என்றான்,இறைவனிடம் உள்ளே பிச்சை கேட்ட என்னிடம்.
தர்மம் செய்தேன் பிச்சைக்காரன் " நல்லாருக்கணும் தம்பி" என்று இருக்கையை உயர்த்தினான், இப்பொழுது அவன் இறைவனானான்.

கைக்கெடிகாரம் - ஓன்று

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் கைக்கெடிகாரம் பரிசு கொடுத்தார் அப்பா, படித்த நேரத்திற்கான பரிசில்லை அது வீணடித்த நேரத்தை உணர்த்தும் தண்டனை. பயனற்றுப்போன நேரத்திற்க்கெல்லாம் உழைத்திருக்கலாமென்று உறுத்திக்கொண்டேயிருந்தது. வீண்போன நேரத்தை தேடினேன், தேடிய நேரமும் வீணாகுமெனத் தெரியாமல். நேரத்தை துரத்த அசை ஆனால் தோற்க்கப் பிடிக்காததால் துறந்தேன். துரத்தாதே நேரமே கழற்றுகிறேன் கைக்கேடிகரத்தை உடனே பாரில் நிறையவுண்டு பார்க்க உன்னைப் பார்த்துப்பார்த்து பார்க்க முடியாமல்.

கைக்கெடிகாரம் - இரண்டு


பூட்டிய செக்கு மாடுகள் வட்டமாக மட்டும் சுற்றுவதைப் போல வட்டமான கண்ணாடிப்பெட்டிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த முட்கள். தொடங்கிய இடம் தெரியாமல் சேரவேண்டிய இடம் புரியாமலும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த முட்கள் சேர்வதர்க்காகத்தான் சுற்றியது போலிருக்கும் சேர்ந்த சில நொடியில் பிரிவதற்க்கான பாதையில் படுவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கும். சேர்வதற்கும் பிரிவதற்கும் ஒரே வேகம் தான். ஒருநாள் நிற்கத்தான் போகிறதென்று தெரியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது நின்ற பின்பும் துடிப்படங்காமல் தவித்துக் கொண்டேயிருக்கிறது.