நான் திரையரங்கிற்குச் சென்று பார்த்த
மிகச் சில ஹிந்திப் படங்களில் ஒன்றாகும்.ரஹ்மானின் இசை மட்டுமே பார்க்க தூண்டியதர்க்கான
ஒரே காரணம். ரன்பீர் மற்றும் இம்டியாஸ் அலியின் சென்ற வெற்றிகளின் தாக்கமும்
இரண்டாவது காரணம்.
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை கேட்டவுடனே அதை
எப்படிபடமக்கிருப்பார்கள் என்ற அரவமும் மொஹித்தின் பாட்டுத்திறமையை ரன்பீர் எப்படி
வெளிப்படுத்திருப்பார் என்ற பல கேள்விகளும் என்னை தூண்டின.
படத்தின் விமர்சனங்களும் சின்ன சின்னக்
குறைகளை மட்டுமே சுட்டிகாட்டியிருந்தனர், சரி ஒரு முறை பார்க்கலாம் என்ற தைரியத்தை
வரவழைத்து சென்றுவிட்டேன்.
கதை பெரிய வித்தியாசமான ஓன்றல்ல ஆனால்
திரைக்கதையின் அமைப்பு எப்படியான ஒரு மாயையை செய்திருக்கிறது. அந்த மாயாஜாலத்திற்கு ரன்பிரின் நடிப்பு, ரஹ்மானின் இசை, நேர்த்தியான
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ஒரு ஸ்ருதியில் சங்கமிக்கிறது.
ரன்பீர் ஒரு மிகச் சாதாரணமான கல்லூரி மாணவனாக
இருந்து ஒரு ராக்ஸ்டார் மாறும் மாற்றத்தையும் அழகாக செய்திருக்கிறார். வெகுளித்தனம்,
காதல், துடிப்பு, ஏமாற்றம், வலி, வேதனை என்று நிறைய பாவனைகள் உடனுக்குடன் செய்யவேண்டிய
ஒரு கதாப்பாத்திரத்தை மிக்கும் அற்புதமாக செய்திருக்கிறார். ஷம்மி கபூரின்
பார்வைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப் பட்டிருகிறது. நர்கிஸ் கொடுத்த
வேலையை நேர்த்தியாக காட்சிகளில் அழகை தூவி நம்மை கொள்ளைகொள்கிறார்.குமுட் மற்றும் பியுஷும்
தங்களுடைய பத்திரங்களை பிரமதாமாக நடித்துள்ளனர்.
இசையின் ரசிகன் நான் இந்தப்படத்தின் ஒவ்வொன்றும்
பாடலும் அருமை என்று முன்னமே சொல்லிவிட்டேன் இன்னும் பல முறை சொல்லவேண்டும். சடா
ஹாக், நாதான் பரிந்தே, கவாலி, ஷேகர் மீன் மட்டும் தான் பிடித்திருந்தது. படம் பார்த்தபின்
தும் ஹூ, ஹவா ஹவா, ஆர் ஹோ, ஷெனாய் "fusion" என்று அனைத்துமே ஈர்த்தது.
இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
அந்த
இடத்தைத் தேடுகிறேன் ஜோர்டான் போல..
No comments:
Post a Comment