Showing posts with label இளையராஜா பழனி பாரதி. Show all posts

Jun 10, 2014

காற்று வெளியில் உன்னை நான் கூவி அழைக்கின்றேன்

மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

ஒரு கடலைப் போல இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு
மங்கலான கனவு

சந்திக்கவும் இல்லை பிரிந்துவிடவில்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

உன் வழிகளில் உதிர்ந்து கிடப்பது பூக்களல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்களல்ல என் நெஞ்சம்

சந்திக்க்கும் இல்லை பிரிந்துவிடவும் இல்லை