நான் பார்த்த இந்த உலகத்தின் என் பார்வையும்,அதில் நான் விரும்பும் மாற்றங்களும், அதற்கான தேடல்களும் இந்தப்பதிவுலகத்தில் பகிர்ந்துகொள்ளபோகிறேன்
Showing posts with label காதலி. Show all posts
Showing posts with label காதலி. Show all posts
Jul 1, 2012
May 24, 2011
அவள்! அவள்!! அவள்!!!
உன் மேகம்
வானின் மேகங்களின் உருவ மாற்றம் பெரிய விசயமில்லை
உன் நேற்றிச்சுருக்கங்களின் மாற்றமோ உன்
கண்களின் கதிர்களை
சந்திரனிலிருந்து சூரியனுக்கும் சூரியனிலிருந்து சந்திரனுக்கும் மாற்றிவிடுகிறது.
காதல் ஒரு மின்னல்
கச்சிதமாய் வரும் சந்திரனுமில்லை நிச்சியமாய் வரும் சூரியனுமில்லை
உச்சியில் வரும் ஒற்றுமை அவ்வளவே!!
பேச்சு
சில ஆண்களுக்கு மட்டுமே சுற்றிலும் பெண்கள் பேச்சு
மற்றவர்களுக்கோ பெண்களைச் சுற்றியே மட்டுமே பேச்சு
வண்ணத்துப்பூச்சியா - மலரா
வண்ணத்துப்பூச்சிகளுக்கோ நீ அவை வந்தமர முடியாத மலர்!
மலர்களுகோ நீ அவை மிது வந்தமாரத வண்ணத்துப்பூச்சி!
நீ மலரா, வண்ணத்துப்பூச்சியா!
சில நேரங்களில் நான் உன்னைத்தேடி..
சில நேரங்களில் நீ என்னைத்தேடி..
வண்ணத்துப்பூச்சியா - மலரா
வண்ணத்துப்பூச்சிகளுக்கோ நீ அவை வந்தமர முடியாத மலர்!
மலர்களுகோ நீ அவை மிது வந்தமாரத வண்ணத்துப்பூச்சி!
நீ மலரா, வண்ணத்துப்பூச்சியா!
சில நேரங்களில் நான் உன்னைத்தேடி..
சில நேரங்களில் நீ என்னைத்தேடி..
படைப்பாளி
பிரம்மனின் படைப்புகளில் மதிப்பிருந்ததில்லை எனக்கு
பழுதுகள் பல நான் உட்பட..
அவன் வெளியிட்ட 5' 2 கவிதைத் தொகுப்பான உன்னைக் கண்டேன்
உன் பாதம் போதும் அவன் பதம் சொல்ல
இனி அவன் படைப்பில்
பழுதுகள் எனக்கும் இல்லை எவர்க்கும் இல்லை.
அழகு
அழகென்பது காட்சிகளில் இல்லை காண்பவனின் பார்வையில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
கண்டவனின் பார்வையை அழகாக்கிய காட்சி நீ.
அழகென்பது இருப்பதில் இல்லை தெரிவதில் தான்
என்பது என் கருத்து கொஞ்ச நேரம் வரை..
தற்பொழுது நீ என் எதிரில்
தெரிவதே இவ்வளவென்றால் இருப்பதில் ஆர்வம் கொண்டேன்.
Subscribe to:
Posts (Atom)



