Jun 10, 2014

காற்று வெளியில் உன்னை நான் கூவி அழைக்கின்றேன்

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

ஒரு கடலைப் போல இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு
மங்கலான கனவு

சந்திக்கவும் இல்லை பிரிந்துவிடவில்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

உன் வழிகளில் உதிர்ந்து கிடப்பது பூக்களல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்களல்ல என் நெஞ்சம்

சந்திக்க்கும் இல்லை பிரிந்துவிடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்


Mar 2, 2014

மோடி சென்னையிலும் ஹிந்தில்

நேற்று ரொம்ப நாள் கழித்து சென்னையின் ரேடியோ மிர்ச்சியின் உரலி (link) கிடைத்தது..சென்னையிலேயே இருந்த ஒரு உற்சாகம் கிடைத்தது 
அப்போது முழுக்க முழுக்க ஹிந்தியில் ஒரு விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது (மிர்ச்சியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கூட விளம்பரம் வரும்).அந்த விளம்பரத்தில் "மோடி" "குஜராத்" "மோடியின் குரல்" இவை வைத்துத்தான் மோடியின்  தேர்தல் விளம்பரமென்று அனுமானம் செய்தேன்.

ஆனால் அந்த விளம்பரத்தில் ஹிந்தியைத் தவிர இன்னோறோன்றும் எனக்கு விளங்கவில்லை அது ஏன் ஹிந்தியில் சென்னையில் மோடியை அறிமுகப்படுத்தவோ இல்லை வாக்குறுதிகளை தெரியப்படுத்த வேண்டும்

தமிழில் தனியாக செலவு செய்ய சோம்பேறித்தனமா??
அசரட்டையான இல்லை மூர்கமான ஹிந்தி தினிப்பா??
திட்டமிட்ட தோல்விக்கான திட்டமா??

Jan 24, 2012

இந்த புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.




அன்னம் பதிப்பகம் 
சிறார் கதைகள் - கி,ராஜநாராயணன்.
நிறங்களின் உலகம் - தேனீ சிருடையன்
சந்த்யா பதிப்பகம்
மணல் தின்ற ஆறு - கல்யாண்ஜி
கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்
சென்னையின் கதை - பிரியா ராஜ்
கிழக்கு பதிப்பகம்
வண்ணநிலவன் சிறுகதைகள்
ரெனிஸ் இயற் தெருவண்ணநிலவன்.
கொஞ்சம் தேனீர் நிறைய வானம் - வைரமுத்து
அடையாளம் பதிப்பகம்
பிரமிள் கவிதைகள் 
அலையன்ஸ் பதிப்பகம்
முகமது பின் துக்ளக் - சோ 

தமிழினி பதிப்பகம்
வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன்
நியூ சென்டுரி புக் ஹவுஸ்
அழகிய பெரியவன் கதைகள்
உயிர்மை பதிப்பகம்
ஜீரோ டிகிரி - சாரு நிவேதா
அதிததின் ருசி - மனுஷ்ய புத்திரன் 
ஆண்பால் பெண்பால் - தமிழ் மகன்
நிலநிழல் - சுஜாதா
பாரதி புத்தகாலயம் 
அன்பின் வெற்றி - யுமா வாசுகி
குமாரபாளயம் ரயில்வே ஸ்டேஷனில் ஓர் இரவு - உதயசங்கர் 
தலையில்லாத பையன்எஸ்.ராமகிருஷ்ணன்
காசுக்கள்ளன் -எஸ்.ராமகிருஷ்ணன்
பீர்முகம்மது அப்பா கதைகள் 
சீவன் - கந்தர்வன் தேர்தெடுத்த கதைகள் 
தேய்பிறை இரவுகளின் கதைகள் - கிரனுர் ஜாகிர் ராஜா 
.தமிழ்செல்வன் கதைகள்
இரா.நடராஜன் கதைகள் 


Nov 22, 2011

Why This kolaveri di








yo boys i am singing song
soup song
flop song

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

rhythm correct

why this kolaveri kolaveri kolaveri di

maintain this

why this kolaveri..di


uniform sylabus change-U
200 crores loss-U
loss-u loss-u two months-U
How do I pass-U
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

Super-U your Hospital Plan-U
good-Library-Gone-U
More Books-U Clean Looks-u
Why you Plucks-U

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama Purse eduthuko
apdiye Kooda Kaas eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
scotch avail in elite-U

tea-u coffee-U
bad for health-U
so Milk Price Raise-U

Bus-U Bus_U
oh Govt Bus_U
Always runs loss-U
Now-U Now-U price raise-U
we use natraj service-u

god we r dying now-u
she say we happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song
 

Nov 21, 2011

ராக்ஸ்டார்



நான் திரையரங்கிற்குச் சென்று பார்த்த மிகச் சில ஹிந்திப் படங்களில் ஒன்றாகும்.ரஹ்மானின் இசை மட்டுமே பார்க்க தூண்டியதர்க்கான ஒரே காரணம். ரன்பீர்  மற்றும் இம்டியாஸ் அலியின் சென்ற வெற்றிகளின் தாக்கமும் இரண்டாவது காரணம்.
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை கேட்டவுடனே அதை எப்படிபடமக்கிருப்பார்கள் என்ற அரவமும் மொஹித்தின் பாட்டுத்திறமையை ரன்பீர் எப்படி வெளிப்படுத்திருப்பார் என்ற பல கேள்விகளும் என்னை தூண்டின.

படத்தின் விமர்சனங்களும் சின்ன சின்னக் குறைகளை மட்டுமே சுட்டிகாட்டியிருந்தனர், சரி ஒரு முறை பார்க்கலாம் என்ற தைரியத்தை வரவழைத்து சென்றுவிட்டேன். 
கதை பெரிய வித்தியாசமான ஓன்றல்ல ஆனால் திரைக்கதையின் அமைப்பு எப்படியான ஒரு மாயையை செய்திருக்கிறது. அந்த மாயாஜாலத்திற்கு ரன்பிரின் நடிப்பு, ரஹ்மானின் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ஒரு ஸ்ருதியில் சங்கமிக்கிறது.

ரன்பீர் ஒரு மிகச் சாதாரணமான கல்லூரி மாணவனாக இருந்து ஒரு ராக்ஸ்டார் மாறும் மாற்றத்தையும் அழகாக செய்திருக்கிறார். வெகுளித்தனம், காதல், துடிப்பு, ஏமாற்றம், வலி, வேதனை என்று நிறைய பாவனைகள் உடனுக்குடன் செய்யவேண்டிய ஒரு கதாப்பாத்திரத்தை மிக்கும் அற்புதமாக செய்திருக்கிறார். ஷம்மி  கபூரின் பார்வைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப் பட்டிருகிறது. நர்கிஸ் கொடுத்த வேலையை நேர்த்தியாக காட்சிகளில் அழகை தூவி நம்மை கொள்ளைகொள்கிறார்.குமுட் மற்றும் பியுஷும் தங்களுடைய பத்திரங்களை பிரமதாமாக நடித்துள்ளனர்.



இசையின் ரசிகன் நான் இந்தப்படத்தின்  ஒவ்வொன்றும் பாடலும் அருமை என்று முன்னமே சொல்லிவிட்டேன் இன்னும் பல முறை சொல்லவேண்டும். சடா ஹாக், நாதான் பரிந்தே, கவாலி, ஷேகர் மீன் மட்டும் தான் பிடித்திருந்தது. படம் பார்த்தபின் தும் ஹூ, ஹவா ஹவா, ஆர் ஹோ, ஷெனாய் "fusion" என்று அனைத்துமே ஈர்த்தது.

இந்தப்படத்தில் தவறு சொல்ல ஒன்றும் என்னகுத் தெரியவில்லை என்ற போதும், தவறும் சரியும் இல்லா இடத்தில எனக்கும் இடம் கேட்கும் நான் தவறு சொல்ல முடியாது.
அந்த இடத்தைத் தேடுகிறேன்  ஜோர்டான் போல..