Jun 10, 2014

காற்று வெளியில் உன்னை நான் கூவி அழைக்கின்றேன்

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

ஒரு கடலைப் போல இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு
மங்கலான கனவு

சந்திக்கவும் இல்லை பிரிந்துவிடவில்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

உன் வழிகளில் உதிர்ந்து கிடப்பது பூக்களல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்களல்ல என் நெஞ்சம்

சந்திக்க்கும் இல்லை பிரிந்துவிடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உன்னை நான்  கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில்  உன்னை நான் தேடி தவிக்கின்றேன்

Mar 2, 2014

மோடி சென்னையிலும் ஹிந்தில்

நேற்று ரொம்ப நாள் கழித்து சென்னையின் ரேடியோ மிர்ச்சியின் உரலி (link) கிடைத்தது..சென்னையிலேயே இருந்த ஒரு உற்சாகம் கிடைத்தது 
அப்போது முழுக்க முழுக்க ஹிந்தியில் ஒரு விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது (மிர்ச்சியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கூட விளம்பரம் வரும்).அந்த விளம்பரத்தில் "மோடி" "குஜராத்" "மோடியின் குரல்" இவை வைத்துத்தான் மோடியின்  தேர்தல் விளம்பரமென்று அனுமானம் செய்தேன்.

ஆனால் அந்த விளம்பரத்தில் ஹிந்தியைத் தவிர இன்னோறோன்றும் எனக்கு விளங்கவில்லை அது ஏன் ஹிந்தியில் சென்னையில் மோடியை அறிமுகப்படுத்தவோ இல்லை வாக்குறுதிகளை தெரியப்படுத்த வேண்டும்

தமிழில் தனியாக செலவு செய்ய சோம்பேறித்தனமா??
அசரட்டையான இல்லை மூர்கமான ஹிந்தி தினிப்பா??
திட்டமிட்ட தோல்விக்கான திட்டமா??